திட்ட முன்மொழிவுகளை தமிழில் வழங்குமாறு ஜி.ரி.லிங்கநாதன் வேண்டுகோள்!!

510

திட்ட முன்மொழிவுகள் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தமிழ் மொழியில் மேற்கொள்ளுமாறு வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராஜா தலைமையில் ஆரம்பமாகிய குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இன்று பிரதேச செயலகத்தினால் மெற்கொள்ளப்பட்ட திட்ட வழங்கல் முன்மொழிவுகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், எதிர்காலத்தில் திட்ட வழங்கல் முன்மொழிவுகளை தமிழ் மொழியில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெற்ற அனைத்து திட்ட முன்மொழிவுகளும் உத்தியோகத்தர்களினால் ஆங்கில மொழியிலே மேற்கொள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.