காதல் ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்!!

799

காதல் ஜோடியை இளைஞர்கள் குழு சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் மஹாராஜ்கஞ்சில் உள்ள காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில், ஒரு காதல் ஜோடியை சுற்றி வளைக்கும் இளைஞர் கும்பல் இருவரையும் சரமாரியாக அடித்து உதைக்கிறார்கள்.

தங்களை விட்டு விடும்படி இருவரும் அழுது கெஞ்சிய போதும் அதை பொருட்படுத்தாமல் பிரம்பால் அந்த கும்பல் இருவரையும் கொடூரமாக தாக்குகிறது.

வீடியோவில் இருக்கும் பெண்ணின் காதலனை தங்கள் கால்களில் விழ செய்த அந்த கும்பல் பின்னர் மீண்டும் அவரை அடிப்பது போல வீடியோவில் உள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஆண்டி-ரோமியோ படை கும்பலே காதல் ஜோடியை தாக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளார்கள்.