ஊக்கமருந்து பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை..!

476

mahindanandaஊக்கமருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கணைகளுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்கும் வீர, வீராங்கணைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து உச்ச பட்சமாக இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு மேலதிமாக ஐந்து முதல் பத்து லட்ச ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஊக்கமருந்து பயன்பாட்டை தூண்டும் நபர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தல், அவற்றை விநியோகம் செய்தல், வைத்திருத்தல் போன்றனவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்பாடு குறித்த உத்தேச சட்ட மூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்ப்பட்டுள்ளது. இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார்.