டில்ஷான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு!!

319

dilshan

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்ஷான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அவர் தனது தீர்மானத்தை நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

1999ம் ஆண்டு நவம்பர் மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் திலகரட்ண தில்ஷான் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இறுதியாக 2013 மார்ச் கொழும்பில் பங்களாதேஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் பங்குபற்றினார்.

இதுவரை அவர் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 492 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 16 சதங்களும் 23 அரைச்சதங்களும் அடங்குகின்றன. அவர் பெற்ற அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் 193 ஆகும்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3385 பந்துகளை வீசியுள்ள டில்ஷான் 39 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.