புதிய பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம்- திகாம்பரம், பிரபா, ரங்கா ஆகியோருக்கு பதவிகள்..!

577

dlsஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய பிரதியமைச்சர்கள் பலர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் புதிய பிரதியமைச்சர்கள் சத்தியப் பிர மாணம் செய்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பிரதியமைச்சர்களின் எண் ணிக்கை தொடர்பில் பல்வேறு கருத் துக்கள் நிலவுகின்றபோதும் 14 பேர் புதிய பிரதியமைச்சர்களாக நியமனம் செய்யலாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பிரதியமைச்சர்களைக் கொண்டிராத அமைச்சுக்களுக்கு புதிய பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திகா, பிரபா, ரங்கா ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள்

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட பழனி திகாம்பரம், ஜெ. ஶ்ரீரங்கா மற்றும் பிரபா கணேசன் ஆகியோருக்கு பிரதியமைச்சர்கள் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் ஆளும் கட்சியில் கூட்டணி வகிக்கும் சிறு கட்சி உறுப்பினர்களுக்கு இவ்வாறு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களும், மாகாணசபைகளில் கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

பெரும்பாலும் 12 முதல் 13 பேர் வரையில் பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச, சனத் ஜயசூரிய, நிசாந்த முத்துஹெட்டிகம, சரத் வீரசேகர, லக்ஸ்மன் வசந்த பெரேரா, அருந்திக்க பெர்னாண்டோ, சாந்த பண்டார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.