வவுனியாவில் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!(படங்கள்)

306


மேசன் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த புனர்வாழ்வு பெற்ற முன்னால் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 133 பேருக்கு சான்றிதழ் மற்றும் தொழில் சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவருவதாவது,

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் கடந்த காலங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்கு வவுனியா தொழிற் பயிற்சி கல்லூரி மூலம் மேசன் வேலை பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.குறித்த பயிற்சி நெறியை பூரணமாக கற்று சித்தியடைந்த 133 முன்னாள் போராளிகளுக்கு தொழில் செய்வதற்கான உபகரணங்களும், பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி மேஜர் நாமல்திலகரட்ன, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர், வவுனியா தொழிற் பயிற்சிக் கல்லூரி அதிபர், நைற்றா நிறுவன அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.24 1 3