250 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் விட்ட சாபம் : ஆடு வெட்டி இரவில் திருவிழா கொண்டாடிய ஆண்கள்!!

573

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் ஒன்று சேர்ந்து 145 ஆடுகளை வெட்டி படையல் வைத்து திருவிழா கொண்டாடியுள்ளனர்.

நாமகிரி பேட்டையில், 250 ஆண்டுகளுக்கு முன் பொங்களாயி என்ற பெண்ணுக்கு, பெண்கள் யாரும் உதவி செய்யாததால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண் விட்ட சாபத்தால், இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாக கேட்டுக்கொண்டதால், விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி18க்கு முன்பாக கிடா வெட்டி பூஜை நடக்கும். இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.

அதே போன்று இந்த ஆண்டும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது.

இவ்விழாவில், மொத்தம், 145 கிடாக்கள் பலியிடப்பட்டன. நேற்று அதிகாலை, சமைக்கப்பட்டு, 3,000த்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டன.