தமிழகத்தின் தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியின் முதல்வர் சுரேஷ் மாணவர்கள் சிலரை தற்காலிக இடைநிறுத்தம் செய்திருக்கிறார்.
இதனால் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் முதல்வர் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர். இதையடுத்து இன்று காலை சுரேஷை அவர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து வல்லநாடு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





