கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை..!

489

protestஎதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், கறுப்பு கொடிகளை இடுதல், பதாகைகளைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மூன்று வாரங்களுக்கும் இந்த தடை அமுலில் இருக்கும்.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், தாமரைத் தடாகம் அரங்கு, நாடாளுமன்ற வளாகம் ஹிக்கடுவ, காலி, கண்டி, சீகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கான பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரச தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அவுஸ்திரேலியாவில் மாநாடு நடத்தப்பட்ட போதும் இதேவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட அலோசகர் ஹரிகுப்தா ரோஹனாதீர தெரிவித்துள்ளார்.

இதற்காக அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.