பேஸ்புக் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
பேஸ்புக் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேஸ்புக் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.
பௌத்த சிறுமிகள் நாட்டின் எதிர்காலமாக கருதுகின்றேன். பேஸ்புக் மோகத்தில் வாழ்க்கயை வீணாக்கிவிடக் கூடாது.
நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இளைய தலைமுறை செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாணந்துரை சிறி சுமங்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





