இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது..!

520

ausஅவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.

அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.

அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்த படகை கொக்கோஸ் தீவு மக்கள் அவதானித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலிய கடற்படையினர் இன்னும் தகவல்களை வெளியிடவில்லை.

அண்மையில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தலின் போது படகு அகதிகளை குறைக்கும் வகையில் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதி படகுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனங்களில் இருந்து தப்புவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.