சர்வதேச இந்திய திரைப்பட விழாவை, நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைப்பது சந்தேகம் என்று பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
44,வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் 20ம் திகதி தொடங்குகிறது. இதை தொடங்கி வைக்க நடிகர் ரஜினிகாந்துக்கு விழா குழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் உடல் நிலை காராணமாக அவர் இதில் கலந்து கொள்வது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி கோவா பொழுதுபோக்கு சொசைட்டியின் துணைத் தலைவர் விஷ்ணு வாக் கூறும்போது, ‘விழாவை தொடங்கி வைக்க ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
அன்றைய திகதியில் அவர் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனால் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை‘ என்றார்.