வீட்டு கட்டிலில் குழந்தையை போர்த்தியிருந்த சேலை, முகத்தை மூடி மூச்சுத்திணறல் எற்பட்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது.
மகரகம பிரதேசத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை கட்டிலில் வளர்த்தி விட்டு தாய் சமையலறை வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் குழந்தையை சென்று பார்க்கும்போது, குழந்தையின் தலை சேலையால் சுற்றப்பட்டிருந்துள்ளது.
உடனடியாக குழந்தை களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் குழந்தையின் வயது 5 மாதங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது





