மொடலிங் துறையில் சாதிக்கும் கறுப்பு ராணி!!

269

தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர் நயாகிம் காட்வெச் (24).
இவர் முதலில் எத்தியோப்பியாவிலும் பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தவர்.

அதன் பின் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இவர், அமெரிக்கா செல்வதற்கு இடைப்பட்ட காலங்களில் தனது இரண்டு தங்கைகளை இழந்துள்ளார்.

கல்வி பயில அமெரிக்கா சென்ற போது, அங்கு அவர் நிறப்பாகுபாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், கேலி, கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார்.

ஆனால், தற்போது கறுப்பு தேகங்கொண்ட இம்மங்கை மொடலிங் துறையில் உள்ள அனைவருக்கும் சவாலான போட்டியாளராகியுள்ளார்.

நயாகிம்மை மளிகைக் கடையில் பார்த்த நபர் ஒருவர் நீங்கள் ஏன் மொடலிங் துறையைத் தெரிவு செய்யக்கூடாது என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே அவர் இது தொடர்பாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.

என்னுடைய புகைப்படங்களைப் பார்த்து யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நான் என்னை விரும்புகிறேன். என் கறுப்பு நிறத்தோலை விரும்புகிறேன். பெரும்பான்மையான மக்களிடமிருந்து விலகி நான் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறேன். என்று தன் கருத்தைப் பதிவு செய்து பலரின் புருவங்களை வியப்பில் உயர்த்தச் செய்துள்ளார் நயாகிம்.

இவரின் புகைப்படங்களுக்கும் நேர்மையான பதிவிற்கும் இவரின் ரசிகர்கள் ”Queen of the Dark” என்கின்ற பட்டப்பெயரை வைத்திருக்கின்றார்கள்.

இவர் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு, மொடலிங் துறையைத் தெரிவு செய்த போதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை.

தற்போது நயாகிம்மை இன்ஸ்டாகிராமில் மட்டும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.