மேற்கு வங்க மாநிலத்தில் தனது பேத்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிங்காமரியைச் சேர்ந்தவர் மோகன் தாபா(வயது 50).
இவர் தனது 15 வயது பேத்தியை கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அவரை தாத்தா வீட்டில் விட்டு விட்டு வேறு இடத்தில் வசித்தனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட அவர் தனது மனைவி எப்பொழுது வெளியே சென்றாலும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியிடம் ஏதோ மாற்றத்தை பார்த்த பள்ளி ஆசிரியர் அவரிடம் விசாரித்தபோது தான் உண்மை வெளியேவந்தது.
இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் கடந்த ஆண்டு யூன் மாதம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதற்கிடையில் தாத்தா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ரூ.50,000 அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.





