இன்றும் தனது ரகசிய காதலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார் கேரளத்து பைங்கிளி மீரா ஜாஸ்மின்.
ரன், சண்டக்கோழி, ஆய்த எழுத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின்.
இவருக்கும், மாண்டலின் ராஜேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை பேச்சுவார்த்தை சென்றது.
ஆனால் ராஜேஷின் குடும்பத்தினர் எதிர்ப்பால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர் மல்லுவுட்டில் நட்சத்திர கலைவிழாக்களில் பங்கேற்கவில்லை என்பதற்காக சில பிரச்னைகளை எதிர்கொண்டார்.
தற்போது பிரச்சனைகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் மீராவின் காதல் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இருவரின் காதல் எந்த நிலையில் உள்ளது என்று கேட்டால், இருவரும் சிக்கலான நேரங்களை சந்தித்தது உண்மை, ஆனால் அது எங்களை பிரியும் அளவுக்கு கொண்டு செல்லவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.