ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர்களான சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
கட்சியை மீளவும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.





