இத்தாலியில் குடியேற சென்றவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மால்டா மற்றும் சிசிலி கடற்பகுதியில் நேற்று சுமார் 150 பேரை ஏற்றிய படகு இத்தாலியின் லம்படுசா தீவு நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக வீசிய சூறைக்காற்றில் தடுமாறிய படகு கடலுக்குள் கவிழ்ந்தது.
அவ்வழியாக இத்தாலிய ரோந்து படகில் சென்ற வீரர்கள் அளித்த தகவலின் பேரில் படகுகளிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்த மீட்புபடையினர் சுமார் 100 பேரை மீட்டனர்.
12 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட சடலங்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன.
கடந்த வாரம் லிபியாவில் இருந்து இத்தாலியில் கள்ளத்தனமாக குடியேற முயன்றவர்கள் வந்த படகு லம்படுசா தீவின் அருகே கவிழ்ந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.





