ரஜினி, தீபிகா படுகோன், நாசர், ஆதி, சரத்குமார், ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ள ´கோச்சடையான்´ படத்தினை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.
மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வரும் படம் என்பதால் படத்தில் நிஜ ரஜினியை பார்க்க முடியாதா என இரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.
பார்ப்பதற்கு அனிமேஷன் படம் போல இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை ஒரிஜினலாகவே ஷூட் செய்தார்களாம். குறிப்பாக, ரஜினியின் நடனம், சண்டை போன்ற காட்சிகளில் ரஜினியே கஷ்டப்பட்டு நடித்தாராம்.
இந்தப் படத்துக்காக ரஜினி ஆடியுள்ள பரத நாட்டியம் இரசிகர்களை வெகுவாகக் கவரும் என்கிறார்கள். உடல்நிலை சரியான பிறகு ரஜினி மிகுந்த பயிற்சியுடன் இந்த நாட்டியத்தை ஆடினாராம்.