வன பாதுகாப்பு திணைக்களத்தின் கள வேலையாளர் ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் அதிகாரி பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமாக இடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பயிற்ச் செய்கையில் ஈடுவதற்காக இந்நபர் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்துள்ளார்.
அப்பெண்ணின் கணவனால் குறித்த அரச காணியில் பயிர்ச் செய்கை செய்யவிருந்த நிலையில் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காது இருக்க வேண்டும் என்பதற்காக அவ் அதிகாரி பாலியல் லஞ்சம் கோரியுள்ளார்.
இவ் லஞ்சத்தை பெற்றுக் கொள்வதற்காக அப் பெண்ணின் வீட்டிற்கு அதிகாரி சென்றிருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னதாக பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை கைது செய்யப்பட்ட அதிகாரியை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.





