வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

862

 
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று (19.08) இரவு 7.45 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட 2கிலோகிராம் கேரளா கஞ்சா பொதியினை வைத்திருந்த யு.பி.எஸ்.கருணாநாயக்க (வயது 50) என்பவரை நேற்று (19.08) இரவு 7.45 மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நடவடிக்கைக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபில்யூ.எ.மகிந்த தலைமையிலான உதவி பொலிஸ் பரிசோதகர் சம்பத் மற்றும் போதைபொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அனுர, கேரத், பிரதீப், கொத்தலாவே ஆகியோர் அடங்கிய குழுவினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் கஞ்சாவினை 1,50,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்து நீர்கொழும்பிற்கு கொண்டு சென்று 3,00,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.