வவுனியாவிலிருந்து நீதிகோரி கொழும்பு நோக்கி நடைபயணம் ஆரம்பம்!!

640

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வவுனியாவிலிருந்து பாத யாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அலுவலகத்தில் நேற்று (19.08.2017​) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்​, ​நாளொன்றுக்கு 250 ரூபா கொடுப்பனவில் கடந்த நான்கு வருடங்களாக பொது மக்களின் பாதுகாப்புக்காக கடமையாற்றி வருகின்றோம்.

எதிர்வரும் 25 ஆம் திகதி வவுனியாவிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம்,

வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய சிவில் அமைப்புக்கள் இளைஞர் கழகங்கள் சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

எங்களுடன் இணைய விரும்புகின்றவர்கள் 0775740100 மற்றும் 0775701702 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பாதயாத்திரையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற வடக்கு கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி எங்கள் கோரிக்கையை கவனத்திலெடுப்பதோடு நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.