இப்ப‌ோதைக்கு கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய விரும்பாத ராதா..!

402

radhaநடிகை கார்த்திகாவுக்கு திருமணம் என்று வெளியான செய்திகள் தொடர்பில் அவரது தாயார் ராதா விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

என்னோட பிறந்தவங்க 5 பேரு. அம்பிகா அக்கா, மல்லிகா அக்கா, அர்ஜுன், நான், என் தம்பி சுரேஷ். இவங்கதான் என் குடும்பம். இவர்களில் மல்லிகா அக்காவுக்குதான் முதலில் கல்யாணம் நடந்தது.

அவர்களுக்கு வினிதா, விஷால் என்று இரண்டு பசங்க. இப்போது வினிதாவுக்குதான் கேரளாவில் வரும் 26ம் திகதி கல்யாணம். இந்த செய்தி எப்படி குழப்பமாச்சுன்னே தெரியல.

என் மகள் கார்த்திகாவுக்கு கல்யாணம் என்ற செய்தியாக மாறிவிட்டது. கார்த்திகாவுக்கு 21 வயசாகுது. இன்னும் 4 வருஷத்துக்கு கார்த்திகா கல்யாணம் பத்தி யாருமே யோசிக்கல.

எனக்கு என் மகள் கார்த்திகாமேல் இல்லாத அக்கறை மத்தவங்களுக்கு இருக்கா? அவள் நடிப்பிலும் சரி, படிப்பிலும் சரி, படு சுட்டி. இப்ப‌ோதைக்கு கார்த்திகாவுக்கு கல்யாணம் பண்ணிவைக்க வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை.

பொய்யான செய்திகளை விசாரிக்காமலே ஏன் இப்படி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை’. இவ்வாறு ராதா பேசினார்.

கார்த்திகா இன்னும் இரண்டு படங்களுக்கு கதை கேட்டிருக்கிறார். விரைவில் அறிவிப்பு வரும்.