மகளைக் கொன்று இரத்தத்தை குடித்து, மாமிசத்தை புசித்த தந்தை கைது..!

484

Jailமகளை கொன்று, இரத்தம் குடித்த தந்தையை பப்பு நியூ கினியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

பசிபிக் கடலில், இந்தோனேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் அமைந்துள்ள நாடு பப்புவா நியூ கினியா. இங்கு பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர்.

இங்குள்ள, லே நகரில், மிருக குணம் படைத்த தந்தை, மகளின் கழுத்தை கடித்து, இரத்தத்தை குடித்து குழந்தையின் மாமிசத்தை தின்று கொண்டிருந்தார்.

அதை பார்த்த சிறுவர்கள் அங்கிருந்த தென்னை மரத்தின் மீது பயந்து ஏறிக்கொண்டனர். அதன் பின் அவர்கள் ஓடி சென்று, ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதை கேள்விப்பட்டு ஊர் மக்கள் திரண்டு வந்து, மகளின் மாமிசத்தை தின்று கொண்டிருந்த நபரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நாட்டில், மனித மாமிசத்தை தின்னும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. சிலரை கொன்று அவர்களது மூளையை ருசித்து சாப்பிட்ட, ஏழு பேர் கடந்த ஆண்டு கைது செய்யபப்ட்டமை குறிப்பிடத்தக்கது.