தமிழகத்தில் சென்ற ஆட்சியில் தமிழில் படத்துக்கு பெயர் வைத்தாலே வரிச்சலுகை கிடைத்துவிடும். இந்த அரசு பதவியேற்றதும் அதில் சில மாற்றங்களை செய்தது.
தமிழில் பெயர் இருப்பதுடன் யு சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். நல்ல முடிவு. ஆனால் அடுத்து ஒரு வாசகத்தையும் தனது வசதிக்காக சேர்த்துக் கொண்டது. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இந்த ஆயுதத்தை வைத்துதான் தமிழக அரசு எதிரிகளை வீழ்த்தி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தும் வரிச்சலுகை அளிக்கவில்லை. படத்தை இதோ பார்க்கிறோம் அதே பார்க்கிறோம் என்று இழுத்தடித்தே ஊத்தி மூடினார்கள்.
அதேநேரம் பாரில் தாலி கட்டும் 3 படத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரிக்க, அவரது மனைவி கிருத்திகா இயக்கத்தில் வணக்கம் சென்னை படம் இன்று வெளியாகியிருக்கிறது.
தமிழில் பெயர், யு சான்றிதழ் என எல்லா தகுதிகளும் இருந்தும் வரிச்சலுகை கிடையாது என மாநில அரசின் வரிச்சலுகைக்குழு தெரிவித்திருக்கிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போயிருக்கிறார் உதயநிதி.