வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

594

 
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (24.08.2017) இரவு 7 மணியளில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – துவிச்சரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு அருகே அதே பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டியில் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் துவிச்சரவண்டியினை செலுத்திச் சென்ற முதியவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.