தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் பிசியாக நடிக்கிறார் அமலாபால். தலைவா படத்துக்கு பின் சம்பளம் உயர்ந்துள்ளது. சக நடிகைகள் போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கும் மாறியுள்ளார். மலையாள படமொன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக தோன்ற சம்மதித்துள்ளார்.
இதில் அமலாபால் ஜோடியாக நிவின்பாலி நடிக்கிறார். இவர் தமிழில் ‘நேரம்’ படத்தில் நடித்தவர். அடுத்து மம்முட்டி, மோகன்லால் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடுகிறார். அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:–
நான் நிறைய கேரக்டர்களில் நடித்து விட்டேன். டாக்டர்,வக்கீல், ஆசிரியை வேடங்களில் வந்துள்ளேன். அடுத்து இதுவரை செய்யாத கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இளவரசியாக நடிக்க விருப்பம் உள்ளது. துணிச்சலான சாகசங்கள் எனக்கு பிடிக்கும். சினிமா வாழ்க்கையில் நடிகை ஸ்ரீதேவி கையால் விருது வாங்கியது மறக்க முடியாதது. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு வரும் பிரபலமானவர்களை தங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
என்னை பொறுத்த வரை பெற்றோரைத்தான் முன் மாதிரியாக கொண்டு செயல்படுகிறேன். அவர்கள் எனக்கு ரொம்ப உறுதுணையாக இருக்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்களை தான் சிறந்த ஆண்களாக கருதுவேன். தன்னம்பிக்கை செயல் திறனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.