கொமர்ஷல் வங்கியின் CSR நிதியத்தின் மூலம் இரண்டு வவு­னியா மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்விக்கு அனுசரணை..!

305

கொமர்ஷல் வங்­கியின் சமூகப் பொறுப்பு நிதி­ய­மா­னது (CSR நிதியம்) பெங்­க­ளூரில் உள்ள பெங்­களூர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் இணை நிறு­வ­ன­மான Sambhram முகா­மைத்­துவ கற்­கைகள் நிலை­யத்தில் கல்வி கற்­ப­தற்­கான புலமைப் பரி­சிலை வென்ற வவு­னியா பகுதி மாண­வர்கள் இரு­வ­ருக்கு அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது.

வர்த்­தக முகா­மைத்­துவம் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் முகா­மைத்­துவம் ஆகிய பிரி­வு­களில் கற்­கவே இவர்கள் தெரி­வாகி இருந்­தனர். கொமர்ஷல் வங்கி ஊழி­யர்கள் தொழிற்­சங்க வங்கி ஊழி­யர்கள் கிளையால் இந்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

vavuniya

படத்தில் இரண்டு பட்­ட­தா­ரி­களும் (இட­மி­ருந்து இரண்­டா­வதும் மூன்­றா­வதும்) கொமர்ஷல் வங்கி சமூகப் பொறுப்பு நிதி­யத்தின் அதி­கா­ரி­க­ளான (இட­மி­ருந்து) பிரி­யந்தி பெரேரா- ஒருங்­கி­ணைப்­பாளர், கொமர்ஷல் வங்கி முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரியும், மற்றும் சமூகப் பொறுப்பு நிதி­யத்தின் நிதிப்­பொ­றுப்­பாளர் ரவி டயஸ், நிதி­யத்தின் தலை­வரும் பணிப்­பா­ள­ரு­மான லக் ஷ்மன் ஹுலு­கல்ல, பணிப்­பா­ளரும் நிதிப்­பொ­றுப்­பா­ள­ரு­மான பேரா­சி­ரியர் உதித்த லிய­னகே, வங்­கியின் சந்­தைப்­ப­டுத்தல் பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதிப்பொறுப்பாளரான ஹஸ்ரத் முனசிங்க, வங்கியின் சமூகப் பொறுப்பு பிரிவு உறுப்பினர் விவேகானந்தன் பரிதீபன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இந்­தி­யாவில் மூன்­றாண்டு கால கற்கை நெறிக்­காக இவர்கள் தெரிவு செய்­யப்­பட்ட போது அவர்­க­ளுக்­கான அனு­ச­ரணை வழங்­கு­மாறு இந்த கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

பட்­ட­தா­ரி­க­ளான பி.எஸ்.கே. சேத­ரத்ன மற்றும் பி.எம்.ரி.எல். ஜய­சேன ஆகியோர் தமது பட்­டப்­ப­டிப்­பினை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்து கொண்டு அண்­மையில் நாடு திரும்­பினர். இவர்­களின் மேல­திக கற்கை தேவை­க­ளுக்­காக கொமர்ஷல் வங்கி சமூகப் பொறுப்பு நிதியம் அவர்­க­ளுக்கு மடிக் கண­னி­களை வழங்­கவும் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.