ஐ படப்பிடிப்பில் படுபிஸியாக இருந்த எமி ஜாக்சனுக்கு புத்துணர்ச்சி பெறுவதற்காக ஷங்கர் மூன்று நாட்கள் விடுமுறை அளித்தாராம். அந்த விடுமுறையாக ஜாலியாக அனுபவைக்க எமி ஜாக்சன் தன் பள்ளித்தோழிகளுடன் கேரளாவில் உள்ள யானைகள் சரணாலத்திற்கு சென்று மூன்று நாட்களும் யானைகளோடு ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.
கேரளா மற்றும் கொடநாட்டில் உள்ள Kodanad Elephant Sanctuary சென்று, அங்கிருந்த யானைகளுக்கு உணவுகள் கொடுத்து சந்தோஷமாக அனுபவித்தாராம். அந்த மூன்று நாட்கள் ஆபிரிக்காவில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக கூறும் எமி, இனிமேல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் இந்த காட்டுப்பகுதிக்கு வருவேன் என அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் எமி ஜாக்சன், பிரிட்டனில் உள்ள யானைகளின் தந்தங்களை பாதுகாக்கும் டிரஸ்ட் ஒன்றில் உறுப்பினராக இருக்கின்றாராம். அவ்வப்போது அந்த டிரஸ்டுக்கு பண உதவியும் அளித்து வருகிறாராம். இந்த டிரஸ்டில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்ஸும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.