வவுனியா மறவன்குளம் பகுதியில் இன்று (27.08.2017) காலை 11.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மறவன்குளம் பகுதியில் இன்று (27.08.2017) காலை 11.30 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
குடும்ப பிணக்கு காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
சடலமாக மீட்கப்பட்டவர் மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த த. சுகந்தினி (வயது – 24) திருமணமானவர் சடலம் தற்போது பிரேத பரிசோதணைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.






