வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் 118 நாட்களின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

368

 
வவுனியா சுகாதார அதிகாரிகள் பணிமணைக்கு முன்பாக நிரந்தர நியமனம் கோரி கடந்த 04.05.2017ம் திகதி சுகாதார தொண்டர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் (29.08.2017) 118வது நாள்.

அதனையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் போராட்ட இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் , வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இதன் போது ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வாக்குறுதி வழங்கியதையடுத்து சுகாதார தொண்டர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ஒரு மாத காலத்திற்குள் தீர்வையினை பெற்றுத்தரவிட்டால் ஒரு மாதம் நிறைவடைந்தவுடன் மீண்டும் எமது போராட்டம் தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டகாரர்களினால் இதன் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்  வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இருவரிடமும் கையளிக்கப்பட்டது.