இந்தியாவில் இலங்கை பிரஜை ஒருவரை, சி.பி.ஐ., பொலிஸார் எனக் கூறி, கடத்திச் சென்ற ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 45 வயதுடைய முகமது இம்தியாஸ் ஆடை தொழிலில் புரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர், தமிழ்நாடு – ஏழுகிணறில் வசிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், இம்தியாசை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்று, மறுநாள் காலை, செங்குன்றம் அருகே விட்டுச் சென்றது.
இதுகுறித்து, இம்தியாஸ், ஏழுகிணறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
விசாரணையில், சி.பி.ஐ., பொலிஸார் என்றும், சட்ட விரோதமாக தங்கியுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் எனக்கூறியும் மர்மகும்பல், இம்தியாசை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த விசாரணையில், இலங்கையை சேர்ந்த முகமது ரிஞ்ஜான், தண்டையார்பேட்டையை சேர்ந்த குமார், ஜெய்கமல், திருவொற்றியூரை சேர்ந்த பிரேம்குமார், மணலியை சேர்ந்த மகாராஜா, மண்ணடியை சேர்ந்த இஸ்மாயில், ஏழுகிணறை சேர்ந்த ரைஸ்அகமது, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துவாரகன், ராயபுரத்தை சேர்ந்த துளசி ஆகியோர் முகமது இஸ்மாயிலிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்துடன் கடத்திச் சென்றதாக தெரியவந்த நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.





