போலி விசா பெற்றுக் கொடுத்து 17 இலட்சம் மோசடி செய்தவர் கைது..!

621

arrest1போலி விசா பெற்றுக் கொடுத்து 17 இலட்சம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் வென்னப்புவ பொலிஸ் பிரிவில் இவர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இவரைக் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் லுணுவில பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.