சிறுமியை வல்லுறவு செய்து 20 ரூபா கொடுத்து யாரிடமும் சொல்லாதே எனச் சென்ற நபரை தேடி வலைவீச்சு..!

468

child8 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ – துனுமடலேவ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 15ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று சிறுமி மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார்.

அங்கு வந்த சந்தேகநபர் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு அவரிடம் 20 ரூபா பணத்தை கொடுத்து நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டுச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி தனக்கு நடந்தவற்றை தனது பாடசாலை நண்பியிடம் கூறியதும் குறித்த நண்பி தனது தாயிடம் அதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் நண்பியின் தாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் சம்பவத்தை தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.