பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம்

479


நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதைப்போல் திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வர வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக வைக்க வேண்டும்.

21-வது நாளில் சஷ்டியும், சதையமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னதியில் 5 வகை பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டி பனியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி வெல்லம் இணைத்த அரிசி மாவை நடுவில் வைத்து இலை எடுத்துக் கொள்வது வழக்கம்.



vinayagar

இந்த சம்பிரதாயம் செட்டிநாட்டு பகுதியில் இன்றும் நிலவி வருகிறது. இந்த விரத வழிபாட்டின் மூலமாக தன விருத்தியும், தான்ய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும். மேலும் குழந்தைச்செல்வமும் பெருகும் என்பதும் நம்பிக்கை. 5 வகை பொரியான நெல்பொரி, கம்பு பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள்ளு பொரி ஆகியவை இருக்க வேண்டும்.



இந்த பிள்ளையார் விரத நோம்பு மார்கழி மாதம் 14-ம் நாள் அன்று வருகிறது. அன்று பிள்ளையாரை விரதமிருந்து கொண்டாடினால் பெருமைக்குரிய வாழ்க்கை அமையும்.