65 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுமி : பெற்றோருடன் செல்ல மறுப்பு!!

529

65 வயது ஷேக்கை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுமி தனது வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவை சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(60) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்தார்.

கடந்த ரம்ஜானிற்கு முன்பு ஐதராபாத் வந்த ஷேக், எனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டார், அதற்கு எனது மகள் மறுத்துவிட்டார். பின்பு, ஓமனில் சொகுசாக வாழலாம் என்று கூறி சில வீடியோக்களை சிக்கந்தர் எனது மகளிடம் காட்டி அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார், எனது மகளை மீட்டுத்தரவேண்டும் என பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து ஓமன் காவல்துறையின் உதவியோடு ஷேக் மற்றும் சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அந்த சிறுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன், எனது பெற்றோர் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர் என கூறியதோடு மட்டுமல்லாமல் எனது வீட்டிற்கு செல்வதற்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஷேக்கிடம் இருந்து சிறுமியை மீட்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.