வரதட்சணை கொடுமையால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

507

திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னதுரை (53) இவரது மனைவி சுசீலா (48) இவர்களது 2வது மகள் இந்துமதி (20).

இவருக்கும் வேணுகோபால் (25) என்பவருக்கும் கடந்த யூன் மாதம் 28-ம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் ஒரு பைக் வாங்கி தருவதாக பெண் வீட்டார் தெரிவித்த நிலையில் நகையை மட்டும் போட்டு, பைக் பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே, மனைவியை வேணுகோபால் பைக் வாங்கி வரும்படி தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்துமதியின் தாய் சுசீலா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்துமதி வரதட்சணை கொடுமையால் இறந்து போனாரா? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.