வவுனியாவில் தியாகி திலீபனின் 30வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

739

 
வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (26.09.2017) மாலை 5.30 மணியளவில் ஈழத்தின் அகிம்சையின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி திலீபனின் 30வது வருட நினைவு தினம் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம், தமிழ் தேசிய இளைஞர் ஒன்றியம், வரியிருப்பாளர் சங்கம், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கம், வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், இணைய ஊடகவியலாளர் சங்கம் போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு தியாகி திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்தியும் மற்றும் தீபசுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.