வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

1292

வவுனியா இ.போ.ச நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குருணாகல், கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் பகுதிக்கு பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2 கிலோ நிறையுடைய கேரளா கஞ்சாவினை இன்று (29.09.2017) காலை 7 மணியளவில் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தமுத்தேகம பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி பதும் தயாசிறி என்ற 34 வயதுடையவரையே கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.