வவுனியாவில் இரவு வேளையில் ஒளிராத வீதி மின் விளக்குகள் பகலில் ஒளிர்கின்றன!!

889

 
வவுனியா நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில நேரங்களில் இரவு வேளைகளில் ஒளிராத இந்த வீதி விளக்குகள் பகல் வேளைகளில் இவ்வாறு ஒளிர்வதாகத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இரவு வேளைகளில் ஒளிரவிடப்படும் மின் விளக்குகள் பகல் வேளைகளில் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24நேரமும் எரிந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது

இன்று (30.09.2017) பிற்பகல் 1 மணியளவில் வவுனியா நகரின் சகல வீதி மின் விளக்குகளும் ஒளிர்ந்து இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் வவுனியா பிராந்திய காரியாலய மின் பொறியியலாளரிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

வீதி மின்விளக்குகளை பகல் நேரங்களில் அணைப்பது வவுனியா நகரசபையினரே, இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வீதி மின்விளக்குகள் குறித்து வவுனியா நகரசபையினர் எவ்வித அக்கறையும் எடுப்பதில்லையென கவலை தெரிவிக்கும் மக்கள் மின்சாரம் வீணாகுவது குறித்து தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.