சாட்டை அடி வாங்கினால் பேய் ஓடிவிடும் : கோவில் திருவிழாவில் அலறி அடித்து ஓடிய பெண்கள்!!

735

 
தமிழகத்தில் கோவில் திருவிழா ஒன்றில் சாட்டை அடி வாங்கினால் பேய் ஓடிவிடும் என்று நம்பப்படுவதால், அடி வாங்கிய பெண்கள் சிலர் அலறி அடித்து ஓடியுள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டைக்கு அடுத்து உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு இருக்கும் அச்சப்பன் கோயிலில் பெண்களுக்கு பேய் விரட்டும் விநோத திருவிழா நடைபெற்றது.

இதையடுத்து அக்கோவிலில் உள்ள மற்ற தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின் பெண்களைச் சாட்டையால் அடித்து பேய்களை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் அமர்ந்து சாட்டையடி பெற்றனர். அப்போது பூசாரி கையில் மிக நீளமான சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார்.

அருகில் இருந்த பூசாரிகள் மட்டை போன்று நீளமான குச்சியை கையில் வைத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில், தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர்.

பூசாரி, வேகமாகச் சாட்டையை சுழற்றி அடிக்க, ஒரு சில பெண்கள் நான்கு, ஐந்து முறை சாட்டையால் அடி வாங்கினர். சிலர் ஒரு அடியிலேயே பதறியடித்து ஓடினர்.

இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் இங்கு சாட்டை அடி திருவிழா நடைபெறும். இந்த கோவிலுக்கு வந்து சாட்டையால் அடிவாங்கினால் திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க முடியும், கடன் பிரச்னை அகலும், தொழில் வளர்ச்சி அடைய முடியும், விவசாயம் செழிக்கும்.

அதுமட்டுமின்றி பேய் பிடித்தவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்டையடி வாங்கினால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாகவே சாட்டையால் அடிவாங்குவது கூறியுள்ளார்.