தனது உயிரை கொடுத்து மனைவியின் உயிரை காப்பாற்றிய ஹீரோ!!

256

 
அமெரிக்காவின் வேகாஸ் இசை நிகழ்ச்சின் போது stephen Paddock என்ற நபர் நடத்திய கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டின் போது 58 பேர் பலியாகியுள்ளனர். 515க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் stephen Paddock என்ற நபரை பொலிசார் சுட்டு கொன்றுள்ள நிலையில் அவரது தோழியை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த தாக்குதலின் போது இடையில் சிக்கிக் கொண்ட தம்பதி தான் Sonny Melton-Gulish Melton. இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த போது, தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடியுள்ளனர்.

ஆனால் எதிர்பாரத விதமாக Sonny Melton இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார். இது குறித்து Gulish Melton கூறுகையில், எனது கணவர் ஒரு துணிச்சலானவர், அவர் அந்த தாக்குதலின் போது தன் கையை பிடித்துக் கொண்டு ஓடினார். தனக்கு பாதுகாப்பாகவும் இருந்தார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரின் மீது பட்டு விட்டது.

தன்னை காப்பாற்றி விட்டு அவர் இறந்துவிட்டார் என்று வருத்தமாக கூறியுள்ளார். இவர்களின் திருமணம் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் Tennessee பகுதியில் உள்ள Big Sandy பகுதியில் வசித்து வந்ததுடன், Henry County Medical Center-ல் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.