வவுனியா வெளிக்குளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர், சிறுவர் தின விழா!!

570

 
வவுனியா வெளிக்குளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர் சிறுவர் தின விழா 01.10.2017 ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

முதியோர் சங்கத்தலைவர் க.நடராஜா தலைமையில் வெளிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் வெளிக்குளம் சனசமூக நிலையம் வெளிக்குளம் ஆலய பரிபாலன சபை என்பன இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் இப்பிரதேச சிறார்கள் முதியோர் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக கிராமசேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் பவித்திரா மற்றும் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.மோகன் ராஜ்மோகன் குருக்கள் பரிபாலன சபைத்தலைவர் க.கந்தசாமி திருமதி நடராஜா கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு. தியாகராஜா, சனசமூகநிலையத்தலைவர் திரு முத்துக்குமார் , திருமதி சிவராஜா , திரு பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறுவர்கள் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.

என்பது வயது கடந்த முதியவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரை நிகழ்திய மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன்,

மூத்தோர்களின் உடல் உள நலத்தைப்பேனுவதற்கு அவர்களுக்கான யோகாசனப் பயிற்சி, நடைப்பயிற்சி என்பனவற்றை மாவட்ட சமூகசேவை அலுவலகம் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இது உழைக்கவேண்டும் எறும்பு போல தாத்தா நீதி சொன்னதை வலியுறுத்தும் எனவும் , மூத்தோர் பத்திரிகை வாசித்தல், புத்தகம் படித்தலை மீண்டும் ஆரம்பித்து சிறுவருக்கு வழிகாட்டிகளாக இருப்பதுடன் பழைய நல்ல கதைகள் எல்லாம் பாட்டி சொல்லித்தந்தார் என்ற மொழிகளை நிதர்சனமாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.