வவுனியா மாவட்ட செயலகத்தில் 12 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கல்!!

600

 
வவுனியா மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளிற்கு இனங்க வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் நேற்று (02.10.2017) மதியம் 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கிருபாகரன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் செயலாளர் ஆர்.தர்சன், சமூக கல்வி பொறுப்பாளர் த.நவீன், முன்னாள் செயலாளர் தி.சிவகுமார் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், சின்னடம்பன் கிராம சேவையாளர் எஸ்.சிவகாந்தன், நெடுங்கேனி தெற்கு கிராம சேவையாளர் எஸ்.சுபாஸ், குளவிசுட்டான் கிராம கிராம சேவையாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் வசித்த மக்கள் தற்போது சின்னடம்பன் பகுதியில் குடியேற்றப்பட்டனர். அங்குள்ள பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தெரிவு செய்யப்பட்ட 12 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.