வவுனியா பாவற்குளம் படிவம்-3 இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் .
T.டனுர்ஜன்-172 புள்ளிகள்
A.அரிசாந்-171 புள்ளிகள்
P.ருஜினிகா-166 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் மிகவும் பின்தங்கிய கிராம சூழல் கொண்ட பாடசாலையில் தமது தளராத முயற்சியுடனும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கற்பித்தல் செயல்பாடு காரணமாகவும் இம்மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் திரு. செல்லத்துரை ஜனந்தன் தெரிவித்திருந்தார்
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.