புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய பாடசாலை மாணவி செந்தில்நாதன் ஆப்தவி 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் சிவநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
122 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 25 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 100க்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையினை இதுவரையில் பெறமுடியவில்லை என அதிபர் மேலும் தெரிவித்தார்.
வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.






