வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள பின்தங்கிய தமிழ்ப் பாடசாலை!!

524

 
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலையான மல்வத்தை, புதுநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை இரண்டு வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளது.

அந்த வகையில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவி சுதர்சன் நிவானுஜா புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன் வரலாற்றில் முதற் தடவையாக குறித்த பாடசாலையில் இம்முறை 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது தொடர்பில் பாடசாலை அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் கருத்து தெரிவிக்கையில்,

சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலை மாணவி சுதர்சன் ஜிவானுஜா 187 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றதன் மூலம் பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அத்துடன், மேலுமொரு வரலாற்று சாதனையையும் எமது பாடசாலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எமது பாடசாலையின் வரலாற்றில் 11 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.