வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை!!

496

வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்று (06.10) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை, வவுனியா மாவட்டத்தில், ஈறற்பெரிய குளம், ஈறற்பெரிய குளம் படை முகாம், ஈறற்பெரிய குளம் SLBC, வேரகம, கற்குண்ட மடு, அலுத்கம, அழகல்ல, பஹல அழுத்வத்த, புபுதுகம, குருந்துப்பிட்டிய, பூ- ஓயா படை முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.