பாம்பினால் ஏற்பட்ட கோர விபத்து!!

559

சேலம் மாவட்டத்தில் பாம்பினை காப்பாற்றுவதற்காக பிரேக் போட்டதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஓமலூர் அருகே இரண்டு லொறிகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன. இதில் முதலில் சென்ற லொறியை தனசேகர் என்பவர் ஓட்டிசென்றுள்ளார்.

பின்னால் வந்த லொறியை தங்கதுரை என்பவர் ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் 10 அடி நீள பாம்பு ஒன்று ரோட்டில் ஊர்ந்து சென்றதால் தனசேகர் பிரேக் போட்டதையடுத்து, பின்னால் வந்த தங்கதுரையும் பிரேக் போட்டுள்ளார்.

ஆனால் தங்கதுரையின் லொறியில் இருந்த இரும்பு கம்பிகள் முன்னோக்கி பாயந்து ஓட்டுநரான தங்கதுரை மற்றும் அவருடன் இருந்த கிளீனர் உடலில் குத்தியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு காரணமான பாம்பும் லொறி சக்கரம் ஏறி உயிரிழந்தது.