வவுனியாவில் ஆசிரியருக்கு எதிராக பரப்புரை செய்த இரு மாணவர்கள் கைது!!

752

வவுனியாவில் ஆசிரியருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் மூலம் பரப்பரை செய்த இரு மாணவர்களை நேற்றைய தினம் (05.10.2017) வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் சாந்தசோலை, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 17வயதுடைய இரு மாணவர்கள் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பான தகாத வர்த்தைகள் மற்றும் சித்தரிக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து வவுனியா நகரம், நூலக வீதி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் நேற்று (05.10.2017) இரவு வேளையில் விநியோகித்துக் கொண்டிருந்த சமயத்தில் வவுனியா பொலிஸார் குறித்த இரு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் மீது இருந்த தனிப்பட்ட கோபத்தினால் தாங்கள் இதை செய்தாக விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.